Donnerstag, 29. April 2010

120 ஆம் பாவேந்தரின் பிறந்த நாளில் நாம் நினைவுக்கொள்ளவேண்டியது.

'' சித்திரச்சோலைகளே ! உமை நன்கு
திருத்த இப்பாரினிலே ! -முன்னர்
எத்தனை தோழர்கள் இரத்தம் சாரிந்தன
ரோ ? உங்கள் வேரினிலே !

..................................................
ஆர்த்திடம் எந்திரக் கூட்டங்களே ! உவ்கள்
ஆதி அந்தம் சொல்லவோ ! நீங்கள்
ஊர் த்தொழிலாளர் உழைத்த உழைப்பில்
உதித்த்து மெய் அல்லவோ !

- எனப் பாவேந்தர் தொடுக்கும் வினாக்களில்
எத்தனைக் கடுமையான உழைப்பை நல்கியும்
எத்தனை உயிர்களைக்கொடுத்தும் கோலார்
தங்கவயலைக் கட்டி எழுப்பி ,கட்டித் தங்கம்
வெட்டு எடுத்து, நாட்டின் பொருளியலை
சமன்மைப் படுத்தியுமுள்ளது. உலகத்தின்
இரண்டாம் பெரிய ,ஆழமான தங்கச்சுரங்கம் என்ற
பெருமைதனைப் பெற்றது.ஆசியாவிலேயேமுதன்முதல்
மின் இணைப்பும், பெரியச் சிறந்த மருத்துமனையும்
பண்டிதர் க.அயோத்திதாசர் ,இரட்டைமலை சீனிவாசன்
வழியை பின்பற்றி பகுத்தறி சிந்நன்னையுடன்
-சீரும் சிறப்பமுடன் கட்டுக்கோப்புடன் வாழ்ந்த
தங்கவயல் தமிழர்களை பார்த்து பாவேந்தர்கேட்பதுபோல்
பாவேந்தரின் பாடல் அமைந்துள்ளதைப் பார் தமிழா?.

Mittwoch, 14. April 2010

அண்ணல் அம்பேட்கரின் 119 -ம்,பிறந்த நாள்


நாகரீகமற்ற மக்களை நாகரீகமுள்ளவர்களாக ஆக்குவதற்கு
இந்துக்கள் மனிதநேய அடிப்படையில் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல , இந்து மதத்தின்
பிடியிலுள்ள கீழ்ச் சாதியினர் மேல் சாதியினரின் பண்பாட்டு
நிலைக்கு உயர்வடைவதையும் அவரகள் திட்டமிட்டுத் தடுத்துள்ளனர்.
- அண்ணல் அம்பேட்கர்

Freitag, 27. November 2009

மாவீரர் நாள்



இன்று எம்மினம் தன்மானத்துடன் வாழ

தந்நில மீட்புக்காகப் போராடி வீரச்சாவினைத்

தழுவி, எம் கடமைதனை உண்ரத்த ஊக்கியாக

விளங்கிடும் மாவீரர் நாள்.தொலைநோக்குடன்

பகுத்தறிவுடன் இல்க்கினை எய்திட நமக்கு

விதையாகிப் போனவர் துளிர்விட்டு,இனியும்

யாம் ஏமாறாது இருக்க ஊக்கமளித்திடும் நாள்.

எம்மின் இலக்காகிய தனித்தமிழ் ஈழ வேட்கை

தணியும்வரைப்போராடுவோம் ஒன்றினைந்து .


ஆம்பூர் பெ.மணியரசன்

Donnerstag, 5. November 2009

எம் அன்னையின் அரவணைப்பு இழந்திட்ட நாள்

அம்மா உம்மை , எம்மிடமிருந்து இவ்வளவு விரைந்து

இயற்கை அன்னை நிலையான ஓய்வினை

உமக்கு வழங்கி தன்னிடம் சேர்த்துக்கொண்டாள்.

இறுதி நாள்வரை எமக்காக எம் நலத்தின் பால்

உழைத்திட்ட உங்கள் அன்பு உள்ளத்தினைப்

பொறுக்காது இயற்கையோ உங்கள் அன்புள்ளம்

தமக்கே கிடைக்கவண்ணமே அழைத்துக்கொண்டாள்

ஓய்வின்றி எமக்காக முப்பொழுதும் உழைத்திட்ட அன்பு

தாயே!நீங்கள் நன்றாக ஓய்வடுங்கள்.எம் கடமைதனை

தவறாது நினவேற்றிவிட்டு எமக்கு அளித்திட்ட அன்புதனை

எமக்கு பின்வருவோரிடம் கையளித்துவிட்டு வருவோம்,

உம் அன்பொளி தொடர்ந்நு இப்பூவுலகில் சுடர்விட்டு ஒளிர.

Donnerstag, 1. Oktober 2009

கோலார்தங்கவயலில் தந்தை என்.சிவராஜ்


தங்கவயலில் தந்தை என்.சிவராஜ் அவர்களுடன் என் தந்தை கே.பெருமாள்
அவர்கள்.இடது புறத்திலிருந்து மூன்றாம் நபர் கே.பி.பாலன் நான்காவதாக உள்ளவர் தங்கவயல் மைசூர் மாநில குடியரசு கட்சி பொது செயலாளர் என் தந்தை கே.பெருமாள் ஐந்தாவதாக உள்ளவர் வள்ளியம்மை ,ஆறாவதாக உள்ளவர் தந்தை என்.சிவராஜ்,ஏழாவதாக உள்ளவர் குடியரசு.

Mittwoch, 30. September 2009

களத்தில் நின்ற காவலர்கள்

ஆரியர் தம் சூழ்ச்சியினால் இயற்கையாகவே இளகிய மனம்
படைத்த மக்கள் மனதில் மதத்தின் பெயரால் இட்டுக்கட்டிய
புராண புளுகுமூட்டைகள் மூலம் சாதி பாகுபாடுகளை புகுத்தி அறிவை முடமாக்கியதுமல்லாது ஏற்ற தாழ்வுகளை
ஏற்படுத்தி தங்களுக்குள் வெறுத்துக்கொள்ளும் பிரித்தாளும் போக்கினை ஏற்படுத்திஅதில் குளிர் காய்கின்றனர். இதனை முதலில் இந்த சாதி, தீண்டாமைதனை எதிர்த்து குரல்
கொடுத்தவர் புத்தரே!புத்தரை வழியை பின் பற்றியோர் அனைவரும் ஆரிய பார்ப்பனர்களால் ஒடுக்கப்பட்டவர்களே! அவருக்கு பின் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் களத்தில் ஆதிதிராவிடருக்காக பார்ப்பனரின் அட்டூழியங்களை பைசா தமிழன்,தமிழன் ஏடுகள் மூலம் அம்பலபடுத்திவர்
க.அயோத்தியதாசர் பண்டிதர்.அவரின் உறவினரான தாத்தா இரட்டைமலை
சீனிவாசன் இலண்டனில் நடந்த மூன்று வட்டமேசை மாநாடுகளில் அண்ணல் அம்பேட்கருடன் கலந்து கொண்டவராவார்.இவரின் தொண்டும்
வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டிய பணிகள்.இவர்களின் அடியையொற்றி அண்ணல் அம்பேட்கருடன் இணைந்து
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உழைத்தவர் சட்டமன்ற உறுப்பினர்.,பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னால் நகராண்மை தலைவராக,இந்திய குடிரசு கட்சியின் தலைவராக விளங்கியவர் தந்தை என்.சிவராஜ் ஆவார்கள்.அவரின் 118வது பிறந்த நினைவு நாள் இன்று. தந்தையின் தொண்டை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்வது இதுவே தக்க தருணமாகும்.

Dienstag, 29. September 2009