Donnerstag, 9. Oktober 2008

தங்கவயல் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டுச் சிறப்பு வெளியீடு

வாழ்வுரிமை
குணா
ஓர் இனமோ மக்கள் பிரிவோ அமைதியாக வாழ்ந்து தனித்து வளம்பெற இயலாத வகையில் , ஒடுக்கப்படவும் அடக்கப்படவும் நேர்கின்ற சூழலில் தான் வாழ்வுரிமை
என்ற பேச்சே எழுகிறது. மொத்தமாகவோ சில்லரையாகவோ அவர்களின் வாழ்வியல் உரிமைகள் பறிக்கப்படவோ மறுக்கப்படவோ நேர்கின்ற போதுதான் , " எங்களுக்கு
இந்த மண்ணில் வாழ உரிமை உண்டு " என்னும் உள்ளக்குமுறல் ஒடுக்குண்ட மக்களிடமிருந்து எழுகிறது. எனவே , மாந்தவுரிமை அல்லது பொதுவியல்(civil) உரிமை என்றெல்லாம் சொல்லப்படும் மக்களுரிமைக்கான மறுப்பெயர்தான் வாழ்வுரிமை . மாந்தவுரிமையோ பொதுவியல் உரிமையோ பொதுவாகத் தனியாள் மட்டத்திற்கான உரிமையைக் குறிக்கும் . ஆனால் , வ்வாழ்வுரிமை என்ப்து ஓர் இனத்தின் அல்லது மக்கள் பிரிவின் ஒட்டுமொத்த உரிமையைப் பற்றியது . ஆகவே , வாழ்வுரிமை மறுப்பு என்பது மிகவும் கொடுமையானது ; ஒட்டுமொத்ததில் சந்தடியில்லாத இனவொழிப்புக்கு ( genocide ) ஈடானது .
இந்தப் பின்னனில்தான் கருநாடகத் தமிழரின் வாழ்வுரிமை மாநாடு நடைப் பெறுகிறது .

மண்ணைப் பறித்தானே !
கன்னடச் சளுவளி இயக்கம் முப்பதாண்டுகளுக்கு முன்னர் எழுந்த்போது , தமிழர்களின் வாழ்வுரிமையைப் பறிப்பதையே – தமிழர்களை மட்டுமே தன் தாக்குதல் குறியாகக் கொள்வதையே - அது தன் னுடைய நோக்கமாகக் கொண்டிருந்தது . பெங்களூர் . கோலார் , மைசூர் ஆகிய மாவட்டங்கள் முழுவதும் , துமுக்கூர் , மாண்டியம் ஆகிய மாவட்டங்களின் பகுதிகளும் திகிழர் எனக் கன்னடரால் அழைக்கப்பட்ட பழந்தமிழர்கள் வழ்வ்ழியாக வாழ்ந்துவந்த மண்ணாகும் . இத்திகிழர்கள் போக, ஆங்கிலேயர் ஆட்சியில் பெங்களூரின் தண்டுப்பகுத்யிலும் கோலார் தங்கவயலிலும் குடியேறிய தமிழர்கள், இங்கு ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர் . கொங்குநாட்டிலிருந்து பழைய மைசூர்ப் பகுதியைப் பிரித்த வடுகப் படையெடுப்பாளர்கள் , அதைத் தனிநாடாக ஆக்கினர் . அதை அவர்கள் கங்கநாடு என்றனர் . இந்தக் கங்கநாட்டில் , தமிழர்களும் தமிழ்ப் பண்பாடுமே மேலோங்கி இருந்ததை வரலாறு காட்டும் .

இந் நிலையில், மொழிவழி மாநிலங்கள் 1956 ஆம் ஆண்டில் அமைந்த பிறகு தோன்றிய அகன்ற கருநாடகத்தின் தலைநகராகப் பெங்களூர் ஆனது. இந்தப் பெங்களூரோ. தமிழர்கள் வழிவழியாக வாழ்ந்துவந்த மண்ணாக இருந்தது. இதனால் , இப் பகுதியை அரக்கப் பறக்கக் கன்னடமயமாக்குவது என்னும் போக்கும் நோக்கும் அரசியல் வடிவம் பெற்றது.அதன் விளைவே கன்னடச் சளுவளி இயக்கமாகும்.
மண்ணை இழந்தவுடன் ஓர் இனத்து மக்களிடமிருந்து முதலில் பறிக்க்ப்படுவது அவர்கள் தங்களின் தாய்மொழியைக் கற்கும் உரிமையே ஆகும் . அரசு அலுவலகங்களிலும் தொழிலகங்களிலும் அவர்களுக்குள்ள வேலைவாய்ப்புகளைக் குறைப்பது அடுத்த வேலை . பெங்களூரிலும் இதுவே நடந்த்து . ஆனால், இங்கு நடந்தவற்றிற்கு ஒரு தனிப்போக்கு உண்டு. பெங்களூர் நகரத்தின் சுற்றுமுற்றும் இருந்த நிலபுலங்கள் யாவும் திகழர்களிடம் இருந்தன. இத் தலைநகரம் மளளவென வளர்கையில். புதுப்புதுப் பகுதிகளை உருவாக்க வேண்டுமாயின், இத் திகிழரிடமிருந்த நிலங்களைப் பறித்தாக வேண்டும். பெங்களூர் மேம்பாட்டு வாரியத்தை(Bangalore Devolopment Authority) அமைப்பது என்னும் சாக்கில் பழந்தமிழரான அத்திகிழர்களின் நிலங்களெல்லாம் கருநாடக அரசால் உரிய இழப்பீடு இன்றிக் கையக்ப்படுத்தப்பட்டது.
இப்பகுதியில் வந்தேறிய தெலுங்கு இரெட்டிகள், திகிழர்களின் கல்லாமையையும் பேதமையையும் கண்டு அவர்களை ஏமாற்றிச் சுற்றும்முற்றுள்ள நிலங்களை எல்லாம் இன்னொரு பக்கம் மெல்லக் கையகப்படுத்தி வந்தனர். எழுபதுகளில் பூதமென எழுந்த கன்னடச் சளுவளி இயக்கம், இந்த இரெட்டிகளுக்குத் தோள்கொடுத்தது.
இந்த்க் கன்னடச் சளுவளி இயக்கத்தின் மூளை, தெலுங்குப் பார்ப்பனர்கள். அதற்குப் பணத்தால் ஊட்டம் தந்தது தெலுங்கரான கோமூட்டிச் செட்டிகள். அதன் அடிதடி அதிரடிப்படையாகத் தெலுங்கு இரெட்டிகள் இருந்தனர். இவ்வாறு தமிழர்களை ஓரங்கட்டவும் – தமிழர் இனத்தை ஒழித்துக்கட்டவும் – மூளையாகவும் முட்டியாகவும் இருந்தவர்கள் தெலுங்கரே ஆவர். ஆனால், இன்று இனவெறி கன்னடர் எல்லாரிடமும் புரையோடிய ஓர் மனநோயாகிவிட்டது.
-வளரும் -