Montag, 2. März 2009

அமைச்சர் வேலுவிடம் தங்கவயல் தமிழரின் நீண்ட நாள் கோரிக்கை

தங்கவயல் தமிழரின் கோரிக்கை
மைய இருப்புப்பாதை இணை அமைச்சர் மாண்புமிகு வேலு அவர்களுக்கு ஆம்பூர்.பெ.மணியரசன் எழுதிக்கொள்வது,
ஐயா அண்மையில் கீழ் கண்ட செய்தியை தினமணி நாளேட்டில் காண நேர்ந்தது,கோலார் தங்கவயலிருந்து பங்காருப்பைட்டைக்கு புதிய இணைப்பு இரயில்களை இயக்க மத்திய இரயில்வே துறை இணை ஆமைச்சர் உறுதி அளித்திருப்பதாக மாநில காங்கிரஸ் நிர்வாகக்குழு உறுப்பினர் ஏ.முத்துமாணிக்கம் தெரிவித்துள்ளார். .என்பதாகும்.
அது, கோலார் தங்கச்சுரங்கம் மூடப்பட்டது முதல் அச் சுரங்கத்தில் பணியாற்றிய ஆயிரக்கணக்கானோர் தினமும் வேலைக்காக பெங்களூருக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தங்கவயலில் இருந்து பங்காருப்பேட்டை சென்றால் மட்டுமே பெங்களூர் செல்லும் தொடரியை(இரயிலை)ப் பிடிக்க முடியும். அதுபோல் பெங்களூரிருந்து திரும்பும்போது, பங்காருப்பேட்டை வந்து பிறகு அங்கிருந்து பேருந்தில் தங்கவயல் திரும்பும் நிலை உள்ளது. இதையடுத்து கோலார் தங்கவயலுக்கும், பங்காருப்பேட்டைக்கும் இடையே அதிகாலை நேரத்திலும், இரவிலும் இணைப்பு இரயிலை இயக்கினால் தங்கவயிருந்து தினமும் பெங்களூர் சென்று திரும்பும் சுமார் இரண்டாயிரம் தமிழர்கள் அலுவல் கரணியப் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் செயலாக்கத்திற்கு உறுதியளித்திருக்கும் மாண்புமிகு வேலு அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்ளுவதோடு தங்கவயல் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.பங்காருபேட்டையிலிருந்து மாரிக்குப்பம் வரை இருப்புப்பாதை உள்ளது.ஒரு சில இணைப்பு தொடர்வண்டி ஓடுகின்றன.இது வேலை நிமித்தம் செல்லும் பயணிகளுக்கு பயனுள்ளதாக இல்லை.
மேலும் பங்காருபேட்டையிலிருந்து குப்பம் வழியாக சென்னைக்கு போகும் வழக்கமே உள்ளது.இதனை பங்காருபேட்டையிலிருந்து குப்பம் ஊடாக சென்னைக்கு போவதற்கு பதிலாக பங்காருபேட்டையிலிருந்து தங்கவயல் மாரிக்குப்பம் ஊடாக குப்பம் செல்வதற்கு ஏற்பாடு செய்துவிட்டால் ,அனைத்து சென்னை-பெங்களூரு-சென்னை வண்டிகளும் தங்கவயல் ஊடாக செல்லும் அல்லவா?இதில் தங்கவயல் மாரிக்குப்பத்திலிருந்து குப்பத்திற்கு மட்டுமே புதிய பாதை அமைக்க வேண்டும்.பங்காருபேட்டை தங்கவயல் மாரிக்குப்பம் பாதையை தேவைப்படின் சீர்யமைத்துக்கொள்ளலாம்.
இந்த ஏற்பாட்டினை செய்து கொடுத்தால் தங்கவயல் மக்களின் நீண்டக்கால வேண்டுக்கோள் (இது ஐம்பது அறுபதுகளில் தங்கவயல் இந்தியக் குடியரசு கட்சியின் சார்பில் என் தந்தை கே.பெருமாள் அவர்கள் பல போராட்டங்களைச் செய்துள்ளார்.தங்கச் சுரங்கம் மூடப்படும் நிலை தெரிந்தே தங்கவயல் தமிழர்களின் எதிர்காலம் கருதி வட மாநிலம் போக இருந்த மண்வாரி எந்திரத் தொழிற்சாலை தங்கவயலில் அமைய இரயிலில் தலைக்கொடுத்து மறியல் செய்து சிறைக்கு சென்றவர்,அதன் பயனாக மண்வாரி எந்திர தொழிற்சாலை தங்கவயலில் அமைந்த்து.என்றாலும் மாநில கன்னட அரசு தமிழர்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை.இன்றுவரை தங்கவயல் தமிழர்கள் கன்னட அரசால் ஒடுக்கப்படுகின்றனர்) ஈடேறுவதுடன் தங்கச்சுரங்கம் மூடப்பட்ட நிலையில் இந்த போக்குவரத்து இணைப்பால் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பலக்கோணங்களில் வாழ்வு ஒளியேற்றிவைத்த க்கு வந்து சேரும்.தங்கவயல் மக்களிடத்தில் மனத்தில்
புகழ் உச்சிலிருப்பீர்கள்.இந்த கோரிக்கையை இப்பொழுதே தமிழரான
நீங்கள் செய்யாவிட்டால் இனி யாரும் செய்யமாட்டார்கள்.
தங்கவயல் மக்களின் நலன் கருதி உங்களின் பதவி காலத்தில்
செய்தால் மிக்க நலமாக இருக்குமென்று கேட்டுக்கொள்கிறேன்.
பண்டுவர்.இராமதாசு அவர்கள் பா.ம.க.தொடங்கிய நாளுக்கு எனக்கும்
அழைப்பிதழ் அனுப்பியிருந்தார்.குறுகியக் கால அழைப்பாக இருந்தமையால் வர இயலாமல் போனது.இன்று பா.ம.க.வின் முன்னெடெப்பு , வளர்ச்சி பாராட்டுதற்குறியது.
நன்றிவுடன்
இவண்
ஆம்பூர்.பெ.மணியரசன்
தமிழ்ப்பண்பாட்டுக்கழக முதல்வன்
செருமனி