Freitag, 27. November 2009

மாவீரர் நாள்



இன்று எம்மினம் தன்மானத்துடன் வாழ

தந்நில மீட்புக்காகப் போராடி வீரச்சாவினைத்

தழுவி, எம் கடமைதனை உண்ரத்த ஊக்கியாக

விளங்கிடும் மாவீரர் நாள்.தொலைநோக்குடன்

பகுத்தறிவுடன் இல்க்கினை எய்திட நமக்கு

விதையாகிப் போனவர் துளிர்விட்டு,இனியும்

யாம் ஏமாறாது இருக்க ஊக்கமளித்திடும் நாள்.

எம்மின் இலக்காகிய தனித்தமிழ் ஈழ வேட்கை

தணியும்வரைப்போராடுவோம் ஒன்றினைந்து .


ஆம்பூர் பெ.மணியரசன்

Donnerstag, 5. November 2009

எம் அன்னையின் அரவணைப்பு இழந்திட்ட நாள்

அம்மா உம்மை , எம்மிடமிருந்து இவ்வளவு விரைந்து

இயற்கை அன்னை நிலையான ஓய்வினை

உமக்கு வழங்கி தன்னிடம் சேர்த்துக்கொண்டாள்.

இறுதி நாள்வரை எமக்காக எம் நலத்தின் பால்

உழைத்திட்ட உங்கள் அன்பு உள்ளத்தினைப்

பொறுக்காது இயற்கையோ உங்கள் அன்புள்ளம்

தமக்கே கிடைக்கவண்ணமே அழைத்துக்கொண்டாள்

ஓய்வின்றி எமக்காக முப்பொழுதும் உழைத்திட்ட அன்பு

தாயே!நீங்கள் நன்றாக ஓய்வடுங்கள்.எம் கடமைதனை

தவறாது நினவேற்றிவிட்டு எமக்கு அளித்திட்ட அன்புதனை

எமக்கு பின்வருவோரிடம் கையளித்துவிட்டு வருவோம்,

உம் அன்பொளி தொடர்ந்நு இப்பூவுலகில் சுடர்விட்டு ஒளிர.

Donnerstag, 1. Oktober 2009

கோலார்தங்கவயலில் தந்தை என்.சிவராஜ்


தங்கவயலில் தந்தை என்.சிவராஜ் அவர்களுடன் என் தந்தை கே.பெருமாள்
அவர்கள்.இடது புறத்திலிருந்து மூன்றாம் நபர் கே.பி.பாலன் நான்காவதாக உள்ளவர் தங்கவயல் மைசூர் மாநில குடியரசு கட்சி பொது செயலாளர் என் தந்தை கே.பெருமாள் ஐந்தாவதாக உள்ளவர் வள்ளியம்மை ,ஆறாவதாக உள்ளவர் தந்தை என்.சிவராஜ்,ஏழாவதாக உள்ளவர் குடியரசு.

Mittwoch, 30. September 2009

களத்தில் நின்ற காவலர்கள்

ஆரியர் தம் சூழ்ச்சியினால் இயற்கையாகவே இளகிய மனம்
படைத்த மக்கள் மனதில் மதத்தின் பெயரால் இட்டுக்கட்டிய
புராண புளுகுமூட்டைகள் மூலம் சாதி பாகுபாடுகளை புகுத்தி அறிவை முடமாக்கியதுமல்லாது ஏற்ற தாழ்வுகளை
ஏற்படுத்தி தங்களுக்குள் வெறுத்துக்கொள்ளும் பிரித்தாளும் போக்கினை ஏற்படுத்திஅதில் குளிர் காய்கின்றனர். இதனை முதலில் இந்த சாதி, தீண்டாமைதனை எதிர்த்து குரல்
கொடுத்தவர் புத்தரே!புத்தரை வழியை பின் பற்றியோர் அனைவரும் ஆரிய பார்ப்பனர்களால் ஒடுக்கப்பட்டவர்களே! அவருக்கு பின் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் களத்தில் ஆதிதிராவிடருக்காக பார்ப்பனரின் அட்டூழியங்களை பைசா தமிழன்,தமிழன் ஏடுகள் மூலம் அம்பலபடுத்திவர்
க.அயோத்தியதாசர் பண்டிதர்.அவரின் உறவினரான தாத்தா இரட்டைமலை
சீனிவாசன் இலண்டனில் நடந்த மூன்று வட்டமேசை மாநாடுகளில் அண்ணல் அம்பேட்கருடன் கலந்து கொண்டவராவார்.இவரின் தொண்டும்
வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டிய பணிகள்.இவர்களின் அடியையொற்றி அண்ணல் அம்பேட்கருடன் இணைந்து
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உழைத்தவர் சட்டமன்ற உறுப்பினர்.,பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னால் நகராண்மை தலைவராக,இந்திய குடிரசு கட்சியின் தலைவராக விளங்கியவர் தந்தை என்.சிவராஜ் ஆவார்கள்.அவரின் 118வது பிறந்த நினைவு நாள் இன்று. தந்தையின் தொண்டை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்வது இதுவே தக்க தருணமாகும்.

Dienstag, 29. September 2009

Donnerstag, 21. Mai 2009

கருப்பு நாள்


இன்றுஎனை ஈன்ற தந்தையின் 26ம் ஆண்டு நினைவு நாள்
தங்கவயல் தமிழர் தலைநிமிர்ந்து வாழ தம்வாழ்நாள் முழுதும் அண்ணல்
அம்பேட்கர் வழிநின்று பாடாற்றியவர்
புத்தவழியினை பின்பற்றுவதாக கூறும் கொடியவிலங்கினால்
கொல்லப்பட்ட எண்ணிக்கியலடங்கா எம் தமிழ் ஈழ மக்களை நினைந்துருகும்
கரிய நாள்.காயமுற்றும் மனத்தளவில் சொல்லொன்னா துயரத்தில் ஆழ்ந்திருக்கும் எம் உடன் பிறப்புக்கள் ஆறுதல் பெறும் நாளை எதிரநோக்குகிறேன்

Freitag, 1. Mai 2009

உழைப்பாளர் நாள்

புரட்சி பாவலரின் 118 ஆம் ஆண்டு பிறந்தநாள் கிழமையில்
உழைப்பாளர் நாளில் அவர் பாடினப் பாட்டினை
நினைவு கூறுவதில் பேருவுவகைக்கொள்கிறேன்.
நீங்களே சொல்லுங்கள் !
சித்திரச் சோலைகளே!உமை நன்கு
திருத்த இப் பாரினிலே-முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தன
ரோ! உங்கள் வேரினிலே.
நித்தம் திருத்திய நேர்மையி னால்மிகு
நெல்விளை நன்னிலமே! - உனக்
கெத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை
இறைத்தனர் காண்கிலமே.
தாமரை பூத்த தடாகங்களே! உமைத்
தந்தக் காலத்திலே - எங்கள்
தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்
சொல்லவோ ஞாலத்திலே.
மாமிகு பாதைகளே! உமை இப்பெரு
வையமெ லாம் வகுத்தார் - அவர்
ஆமை எனப் புலன் ஐந்தும் ஒடுங்கிட
அந்தியெல்லாம் உழைத்தார்.
ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே! - உங்கள்
ஆதி அந்தம் சொல்லவோ? - நீங்கள்
ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பில்
உதித்தது மெய் அல்லவோ?
கீர்த்திகொள் போகப் பொருட்புவியே! உன்றன்
கீழிருக்கும் கடைக்கால் - எங்கள்
சீர்த்தொழி லாளர் உழைத்த உடம்பிற்
சிதைந்த நரம்புகள் தோல்!
நீர்கனல் நல்ல நிலம் வெளி காற்றென
நின்ற இயற்கைகளே! - உம்மைச்
சாரும் புவிப்பொருள் தந்ததெவை? தொழி
லாளர் தடக்கைகளே!
தாரணியே! தொழிலாளர் உழைப்புக்குச்
சாட்சியும் நீயன்றோ? - பசி
தீரும் என்றால் உயிர்போகும் எனச்செல்லும்
செல்வர்கள் நீதி நன்றோ?
எலிகள் புசிக்க எலாம் கொடுத்தே சிங்க
ஏறுகள் ஏங்கிடுமோ? - இனிப்
புலிகள் நரிக்குப் புசிப்பளித்தே பெரும்
புதரினில் தூங்கிடுமோ?
கிலியை விடுத்துக் கிளர்ந்தெழுவார் இனிக்
கெஞ்சும் உத்தேசமில்லை - சொந்த
வலியுடையார் இன்ப வாழ்வுடையார் இந்த
வார்த்தைக்கு மோசமில்லை.

Dienstag, 14. April 2009

அண்ணல் அம்பேட்கரின் பிறந்த நாளில் அவரின் கருத்துகளை நினைவு கூறுகிறோம்.

அண்ணல் அம்பேட்கரின் பிறந்த நாளில் அவரின் கருத்துகளை நினைவு கூறுகிறோம்.
அது....
* இந்து மதத்தில் மனசான்றுக்கோ - பகுத்தறிவிக்கோ - சிந்தனைக்கோ முகாண்மை(முக்கியத்துவம்)இல்லை அல்லது வளர்ச்சிக்கும் வழியில்லை.ஓர் இந்து என்பவன் மறை(வேதங்)களுக்கு அடிமையாகவும் அல்லது ஸ்மிருதிகளுக்கு அடிமையாகவோ அல்லது மேன்மையர்(மகான்)களைப் பின்பற்றி வாழ்பவனாகவும் இருக்கவேண்டும்.
*மேல்சாதிகள் வளத்திற்கும், முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் குமுகாய(சமூக) உயர்வுக்கும் இந்து மதம் தோற்றுவிக்கப்பட்டது.
*மதம் மனிதனுக்காக, மதத்திற்காக மனிதன் அல்ல.
*இந்து மதம் குமுகாயத்தில்(சமிதாயத்தில்)தன்மானத்திற்கு இடமில்லை.இந்து மதம் சாதி வேறுபாடு(பேதம்) ஊன்ற கொள்கையின் அடிப்படையில் அமைக்கப்பட்டது.மனிதனை மனிதனாக மதிப்பதில்லை.தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு கரணியம்(காரணம்)தீண்டாமைதான்.இது சாதி இந்துக்களுக்கும். தீண்டத்தகாதவர்களுக்கும் நடக்கின்ற போராட்டமே.இந்த போராட்டத்தில் தன்மானத்தோடு சரிசம உரிமைப்பெற்று வாழ இந்து மதத்திலிருந்து தாழ்த்தப்பட்ட இன மக்கள் விடுபட வேண்டும்.
*இந்த நாட்டிலுள்ள சில முகாமையான குமுகாயப் பிணக்குகள் குறிப்பாக சாதி- தீண்டாமை - குமுகாய இழிவு தீர்க்கப்படும் வரை
விடுதலை தேவையில்லை என்பது அம்பேடகரின் கருத்தாயிருந்த்து.
வெள்ளைக்காரர் ஆட்சியில் அடிமைத்தனம் என்னென்பதை பார்ப்பனர்களும் உயர்சாதி இந்துக்களும் உணர்கிறார்கள்.ஆனால் அது அவர்களுக்கு அரசியல் அடிமைத்தனம் மட்டும்தான்.தாழ்த்தப்பட்ட மக்களுக்கோ! குமுகாய - பொருளாதார அடிமைத்தனமும் பாரமாய் இருந்துக்கொண்டிருக்கிறது.1931ஆம் ஆண்டு இலண்டன் வட்டமேசை மாநாட்டில் இதைச் சுட்டிக்காட்டினார்.'' 200 ஆண்டுகாலம் வெள்ளையரின் ஆட்சியில்
அடிமைகளாயிருந்தற்காகப் போராடி விடுதலை கேட்கிறீர்கள், ஆனால் , 2500 ஆண்டுகளாக நாங்கள் உங்களிடம் அடிமைகளாகயிருக்கிறோமே! எங்களுக்கு எப்போது விடுதலை? என்று
கேட்டார், யாராலும் விடைக் கூறமுடியவில்லை.
உண்ண உணவின்றி அவதிவுறுபவனுக்கு அரசியல் விடுதலை ஒரு கேடா?
சாதி வெறுப்புணர்வால் தலைகவிழ்ந்து நடப்பவனுக்கு அரசியல் விடுதலை ஒரு கேடா?
குமுகாய இழவுகளைத் தோளில் சுமந்தவண்ணம் திரியும் மக்களுக்கு
அரசியல் விடுதலை ஒரு கேடா?
இன்று கூலி செய்தால்தான் இன்றே சாப்பாடு என்கிற நிலையில் வாழ்ந்து வரும் மக்களுக்கு அரசியல் விடுதலை ஒரு கேடா?
அடிப்படைத் தேவைகளில் ஒன்றைக்கூட உருப்படியாய்ப் பெறமுடியாமல் வாழ்ந்து வரும் மக்களுக்கு அரசியல் விடுதலை ஒரு கேடா?
இவற்றைத்தான் திரும்பத்திரும்ப அம்பேட்கர் கேட்டார்.
இந்த நாட்டிலுள்ள கடவுள் - மத - இலக்கியங்கள் - காப்பியங்கள் அனைத்தும் வேண்டும்மென்றே வேறுப்பாட்டையும் இழிவையும்
ஏற்றத் தாழ்வுகளையும் கற்பிக்கின்றன.இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் குமூக சமத்துவத்தக்காகப் பாடுபட்டு அதை ஏற்படுத்துவதற்காகத்தான் காந்தியும், காங்கிரசும் மற்ற அரசியல் - குமூக நிறுவனங்களும் பாடுபட வேண்டுமேயொழிய, வெறும் அரசியல் விடுதலைக்காக மட்டும் போராடுவது பொருத்தமாகாது என்று கூறினார்.பார்ப்பனர்களுக்கும், உயர்சாதிக்கார்ரகளுக்கும்தான் விடுதலை இந்தியாவில் வாழ்விருக்கும். அவர்களின் தன்னல வேட்டைக்காடாக இந்த நாடு மாற்றப்பட்டு விடும் என்று எச்சரித்தார்.
எனவே, குமூக சமத்துவத்தை ஏற்படுத்தினால்தான் அரசியல் விடுதலையில் பொருளுண்டு என்று அம்பேட்கர் கூறினார்.
சாதியை ஒழித்த பிறகே வேறு எந்தப் புரட்சியையும் இங்கு உருவாக்க முடியும் என்று கூறினார்.
அரசியல் விடுதலையால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை என்றார்.
விடுதலைக்குப்பின் ஆட்சி பார்ப்பன - சாதி இந்துக்களின் கைக்கு மாறும், தாழ்த்தப்பட்ட மக்களின் பிணக்குகள் மேலும் மோசமாகும் என்றார்.
விடுதலை இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அடிமை வாழ்வே தொடரும் என்றார்.
இந்த வகையில், அம்பேட்கர் கூறிய அனைத்துமே உண்மையென
உணரப்பட்டு வருவதோடு, இப்பிணக்குகள் மேலும் அதிகமாகி, தாழ்த்தப்பட்ட மக்கட் குமுகாயமே நசிந்து போய்விடுமோ! என்ற அச்சமும் அதிகமாகி வருகிறதை நாம் கண்க்கூடாக காணுகிறோம்.
அம்பேட்கர் தன் வாழ்நாளில் ஈடுபட்ட மிக முகாமையான பணிகளில் ஒன்று தாழ்த்தப்பட்ட
மக்களுக்கு கோயில் நுழைவு உரிமை மறுக்கப்பட்டதைப பெற்று தருவது.
கோயிலுக்குள் போக்கஃ கூடாதவர் என்று ஒரு சாராரை வைத்துக்கொண்டு ' கோயில் புனிதமானது ' என்று கூறுவது அயோக்கியத்தனமான கூற்று என்றார்.கோயிலைக் கட்டிவர்களையே கோயிலுக்குள் நுழையவிடாமல் தடுக்கும் சாதிய இந்துகளை கடுமையாக
சாடினார்.இதற்காக 1930ஆம் ஆண்டே நாசிக்கில் போராடினார்.தமிழ் நாட்டில் கோயில் நுழைவு உரிமைக்காக முதன் முதலில் உயிரைப் பணயம் வைத்துக் களத்தில் இறங்கிய குமிகம் சாணார்(நாடார்) குமுகமாகும்.தனித்து நின்று போராடியே இவ்வுரிமையை அவர்கள் வென்றார்கள்.1916க்கிப் பின் நீதிக் கட்சியினர்பலர் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கோயில்
நுழைவு உரிமை பற்றிப் பேசலானார்கள்.பின்னாளில் பெரியாரின் குரலெழிப்பியுள்ளார்.
இன்றுவரையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கோயில் நுழைவு உரிமை இல்லை.
என் வலைத் தளம் காண....,
thamizhankural.org

Montag, 2. März 2009

அமைச்சர் வேலுவிடம் தங்கவயல் தமிழரின் நீண்ட நாள் கோரிக்கை

தங்கவயல் தமிழரின் கோரிக்கை
மைய இருப்புப்பாதை இணை அமைச்சர் மாண்புமிகு வேலு அவர்களுக்கு ஆம்பூர்.பெ.மணியரசன் எழுதிக்கொள்வது,
ஐயா அண்மையில் கீழ் கண்ட செய்தியை தினமணி நாளேட்டில் காண நேர்ந்தது,கோலார் தங்கவயலிருந்து பங்காருப்பைட்டைக்கு புதிய இணைப்பு இரயில்களை இயக்க மத்திய இரயில்வே துறை இணை ஆமைச்சர் உறுதி அளித்திருப்பதாக மாநில காங்கிரஸ் நிர்வாகக்குழு உறுப்பினர் ஏ.முத்துமாணிக்கம் தெரிவித்துள்ளார். .என்பதாகும்.
அது, கோலார் தங்கச்சுரங்கம் மூடப்பட்டது முதல் அச் சுரங்கத்தில் பணியாற்றிய ஆயிரக்கணக்கானோர் தினமும் வேலைக்காக பெங்களூருக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தங்கவயலில் இருந்து பங்காருப்பேட்டை சென்றால் மட்டுமே பெங்களூர் செல்லும் தொடரியை(இரயிலை)ப் பிடிக்க முடியும். அதுபோல் பெங்களூரிருந்து திரும்பும்போது, பங்காருப்பேட்டை வந்து பிறகு அங்கிருந்து பேருந்தில் தங்கவயல் திரும்பும் நிலை உள்ளது. இதையடுத்து கோலார் தங்கவயலுக்கும், பங்காருப்பேட்டைக்கும் இடையே அதிகாலை நேரத்திலும், இரவிலும் இணைப்பு இரயிலை இயக்கினால் தங்கவயிருந்து தினமும் பெங்களூர் சென்று திரும்பும் சுமார் இரண்டாயிரம் தமிழர்கள் அலுவல் கரணியப் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் செயலாக்கத்திற்கு உறுதியளித்திருக்கும் மாண்புமிகு வேலு அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்ளுவதோடு தங்கவயல் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.பங்காருபேட்டையிலிருந்து மாரிக்குப்பம் வரை இருப்புப்பாதை உள்ளது.ஒரு சில இணைப்பு தொடர்வண்டி ஓடுகின்றன.இது வேலை நிமித்தம் செல்லும் பயணிகளுக்கு பயனுள்ளதாக இல்லை.
மேலும் பங்காருபேட்டையிலிருந்து குப்பம் வழியாக சென்னைக்கு போகும் வழக்கமே உள்ளது.இதனை பங்காருபேட்டையிலிருந்து குப்பம் ஊடாக சென்னைக்கு போவதற்கு பதிலாக பங்காருபேட்டையிலிருந்து தங்கவயல் மாரிக்குப்பம் ஊடாக குப்பம் செல்வதற்கு ஏற்பாடு செய்துவிட்டால் ,அனைத்து சென்னை-பெங்களூரு-சென்னை வண்டிகளும் தங்கவயல் ஊடாக செல்லும் அல்லவா?இதில் தங்கவயல் மாரிக்குப்பத்திலிருந்து குப்பத்திற்கு மட்டுமே புதிய பாதை அமைக்க வேண்டும்.பங்காருபேட்டை தங்கவயல் மாரிக்குப்பம் பாதையை தேவைப்படின் சீர்யமைத்துக்கொள்ளலாம்.
இந்த ஏற்பாட்டினை செய்து கொடுத்தால் தங்கவயல் மக்களின் நீண்டக்கால வேண்டுக்கோள் (இது ஐம்பது அறுபதுகளில் தங்கவயல் இந்தியக் குடியரசு கட்சியின் சார்பில் என் தந்தை கே.பெருமாள் அவர்கள் பல போராட்டங்களைச் செய்துள்ளார்.தங்கச் சுரங்கம் மூடப்படும் நிலை தெரிந்தே தங்கவயல் தமிழர்களின் எதிர்காலம் கருதி வட மாநிலம் போக இருந்த மண்வாரி எந்திரத் தொழிற்சாலை தங்கவயலில் அமைய இரயிலில் தலைக்கொடுத்து மறியல் செய்து சிறைக்கு சென்றவர்,அதன் பயனாக மண்வாரி எந்திர தொழிற்சாலை தங்கவயலில் அமைந்த்து.என்றாலும் மாநில கன்னட அரசு தமிழர்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை.இன்றுவரை தங்கவயல் தமிழர்கள் கன்னட அரசால் ஒடுக்கப்படுகின்றனர்) ஈடேறுவதுடன் தங்கச்சுரங்கம் மூடப்பட்ட நிலையில் இந்த போக்குவரத்து இணைப்பால் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பலக்கோணங்களில் வாழ்வு ஒளியேற்றிவைத்த க்கு வந்து சேரும்.தங்கவயல் மக்களிடத்தில் மனத்தில்
புகழ் உச்சிலிருப்பீர்கள்.இந்த கோரிக்கையை இப்பொழுதே தமிழரான
நீங்கள் செய்யாவிட்டால் இனி யாரும் செய்யமாட்டார்கள்.
தங்கவயல் மக்களின் நலன் கருதி உங்களின் பதவி காலத்தில்
செய்தால் மிக்க நலமாக இருக்குமென்று கேட்டுக்கொள்கிறேன்.
பண்டுவர்.இராமதாசு அவர்கள் பா.ம.க.தொடங்கிய நாளுக்கு எனக்கும்
அழைப்பிதழ் அனுப்பியிருந்தார்.குறுகியக் கால அழைப்பாக இருந்தமையால் வர இயலாமல் போனது.இன்று பா.ம.க.வின் முன்னெடெப்பு , வளர்ச்சி பாராட்டுதற்குறியது.
நன்றிவுடன்
இவண்
ஆம்பூர்.பெ.மணியரசன்
தமிழ்ப்பண்பாட்டுக்கழக முதல்வன்
செருமனி

Mittwoch, 14. Januar 2009

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

2040 ம் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்
தமிழரேதமிழரே இன்னுமென்ன உறக்கம்?
பொழுதும்புலர்ந்துவிட்டது, கதிரவனும் கண்
விழித்துகதிர் வீச முற்பட்டுவிட்டான் நீவீர்
ஆழ்ந்துஉறங்கிடும் வேளை உம்மைச் சுற்றி
என்னநடக்குதென கனவில் காணவியலாது
தமிழரேகண்விழித்துப் பார் உம் கை கால்கள்
சாதி,மதம்,சடங்கு,கணிய மூடநம்பிக்கையால்
கட்டப்பட்டுள்ளதைபார்!பார்!! கண்விழித்து பார்!
நம்மினத்தைக்காட்டிக் கொடுக்கும் எட்டப்பன்கள்,
நும்ஏமாளித்தனத்தை பயன்படுத்தி ஏத்திப்பிழைக்கும்
வேட்டுவவல்லாதிக்க எத்தர்கள் உம் தொடையில்
கயிறுதிரிப்பதைக் கண்விழித்து பார்! தமிழினத்திற்கு
முகவரிகொடுக்க மானத்தோடு தன்னுரிமையோடு வாழ
தன்னுயிர்ஈந்து ஈகத்துடன் போராடிடும்
தன்மானத்தமிழ்ச்சிகள்தமிழர்களை வழி நடத்தும்
பண்டைத்தமிழ்வீரம் ஒருங்கமைந்த மாவீரனைப் பார்!
அம்மாவீரனின்எண்ணம் ஈடேற முடக்கும் சூழ்ச்சிகளை
உடைத்திடதமிழரே நாம் அனைவரும் ஒன்றினைந்து
உலகத்தவர்க்குநம் ஞாயமான கோரிக்கைகளை
எடுத்தியம்ப,மேற்குறிப்பிட்ட எம்மீது திணிக்கப்பட்டதனை கலைந்து
பகுத்தறிவுக்கண்க்கொண்டு எம் தமிழ்ச்சான்றோர் எண்பத்தெட்டு
ஆண்டுகளுக்குமுன் ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்த்தொடராண்டான
திருவள்ளுவத்தமிழ்ப் புத்தாண்டில் தமிழருக்குள் தமிழில்
உரையாடிடவும் தமிழ்ப்பெயர் சூட்டிடவும் சூளுரை ஏற்போம் வாரீர்!
பொங்கட்டும்தமிழ் உணர்வு ஓங்கட்டும் மனிதநேயம்.

இவண்
ஆம்பூர்பெ.மணியரசன்.
தமிழ்ப்பண்பாட்டுக் கழகம் செருமனி
thamizhankural.org