Donnerstag, 13. November 2008

கோடையிடி கே.பெருமாள்

கோடையிடி கே.பெருமாள்
தங்கவயல்முன்னாள் குடியரசுக்கட்சி பேச்சாளர் மற்றும் தி.மு.க தலைவர் க.மணிமேகலன்
குண நலத்தங்கம்!குன்றாஅறிவொளிமன்றம்! !இனகுணத்தலைவன்!!!அயராதுழைப்பதிலே முதல்வன், பணமிருப்பின் நாளைய செலவிற்கு நமக்கு வேண்டுமே என கிஞ்சித்தும் எண்ணாதவர்.கவலையே கொள்ளாதவர், கருணையின் திடல்,காருண்யக்கடல்பொருணையின் நீள் திடல். பொல்லாங்கு புரிவோர்க்கும்,அவர் நாண உதவிகள் புரிந்து பெரும் மகிழ்வு கொண்டவர்.அதிலே பேரின்பம் கண்டவர்.
இளையோராயினும் பெரியோராயினும் இன்முகத்தோடு
புன்சிரிப்போடு பேசுவதிலே.கனிவுரும் பார்வை வீசுவதிலே வல்லவர்.மிகமிக நல்லவர். நுண்ணிய செயலிலும் தன் கண்ணியத்தை இழக்காத புண்ணிய சீலர்! சீர்மிகு ஞால மூலர்.
சந்தர்ப்பத்திற்கு தகுந்தார்போல், சுயநல மஞ்சத்தில் சாயாதவர். நுனிப்புல் மேயாதவர்.அட்க்கரும்பை சுவைத்து இரும்பூதெய்தவர்.
பகிர்ந்தளிப்பதிலே பரவச கானம் பொழிந்தவர்.பிறர் மனம் புண்படாத அளவிற்கு மென்மொழி பேசிடும் பண்பட்ட மனிதர்.மரியாதைக்கு மகுடம் சூட்டி மகிழ்ந்திடும் மகத்தான மாண்மிகு மனிதர்.உரிமைதனை விட்டுக்கொடுக்காத வெண்கல உள்ளத்தோன்.வைரவுரமேறிய அரக்கு மாளிகை, இரக்கத்தின் மேல்மாடம், ஈகையின் ஞானப்பீடம்.
அன்புடனே முகமலர்ந்து உப்பில்லா கூழ் கொடுத்தாலும்
உண்பதிற்கோர் அமிர்தமாம் எனும் பாகுமொழி விளங்க வசதியற்றோர் வருமையில் உழன்றோர் ஏழை எளியோர் எவராயினும் , வாஞ்சையோடு,நெஞ்சுகந்து, பழங்கஞ்சியே கொடுப்பினும் சரியே,உரிமை உணர்வோடு,பெருமை பாங்கோடு, உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தார் எனும் உவகை பூக்கும், உள்ளம் மணக்கும், உத்தம குணமிக்கவர்.
தோல்வியை கண்டு துவளாதவர்.வெற்றியைக் கண்டு வெறிக்கொள்ளாதவர்.ஆயினும், எங்கும் எதிலும் அண்ணாரை தோல்வி தொட்டதேயில்லை.வெற்றிக்கனியை விட்டதேயில்லை.
சளைக்காத சீராளர் விளையாட்டிலும் பேராளர்
இங்கிலாந்து நாட்டு(John Tailor & Sons)தென்னிந்தியா கர்நாடக மாநிலம்,கோலார் மாவட்டம் தங்கச்சுரங்கத்தை விக்டரிஸ்போர்ட்ஸ் கிளப்(Victory Sports Club)வெற்றி விளையாட்டு நிலையத்தின் செயலாளராக, இடைவிடாது பன்னெடுங்காலமாக தொடர்ந்து பதவியேற்று பல்வேறு போட்டிகளில் ஈடுப்பட்டு, மிகுந்து பாடுப்பட்டு,விளையாட்டு வீரர்களை பயிற்றுவித்து ஊக்குவித்து, வெள்ளிப்பதக்கங்கள், தங்கமுலாம் புசப்பட்ட
கோப்பைகள், வெற்றி கேடயங்கள், நற்சான்று பத்திரங்களை,
ஆங்கிலேய நடுவர்கள் மூலமாக தலைவர் பெருமாள் பெற்றுத்
தந்தார்கள்.

ஆங்கிலேயர்களால் பாராட்டப்பட்டவர் நமது பெருமைக்குரிய அருமை தலைவர் கே.பெருமாள் அவர்கள்.
மைசூர்மைன்ஸ்(Mysore Mines),சாம்பியன் ரீப்ஸ்(Champion Reefs),உரிகம் மைன்ஸ்(Oorgaum Mines),கோரமண்டல், மற்றும் பாலக்காடு ஆகிய ஐந்து பகுதிகளின் இன்டர்மைன்ஸ் ஸ்போர்ட்ஸ்(Intermines Sports) ஜிம்கானா விளையாட்டரங்கத்தில்
(தற்போது டாக்டர் அம்பேத்கர் ஸ்டேடியம் என்று பெயர்மாற்றம் பெற்றுள்ளது) நடைப்பெறும்போதெல்லாம் பங்குப்பற்றி வாகைச்சூடியவர்,வெற்றிப்பண்பாடியவர்.
அதன்பயனாக ஆங்கிலேய அதிகாரிகளிடம் தனக்கேவுரித்தான தகுதி திறமையோடு சிபாரிசு மூலமாக பலருக்கு சுரங்கத்தில் வேலை வாய்ப்பை வாங்கி தந்ததோடு அவர்தம் வாழ்வை செம்மை படுத்தியவர்,நல்லதொரு குடும்பமாக, பல்கலைக்கழகமாக, பழத்தோட்டமாக,அறிவை மணக்கச்செய்தவர்.அன்பை இனிக்கச்செய்தவர்.

ஐவர் பூப்பந்தாட்டம் Badminton Fiver


ஐயா கே.பெருமாள் அவர்களும் ஒரு தலைச்சிறந்த விளையாட்டு வீரரே.பூபந்தாட்ட ஐவர் குழுவிலே மைய ஆட்டக்காரராக ஆடுவார்.
பிண்மிக்கத்தக்க வகையில் புதரிலிந்ருது புறப்பட்டு பாயும் புலியென வில்லிலிருந்து விடுப்பட்ட கணையென தலைவர் மட்டையில் அடிப்பட்ட பந்தின் வேகத்துற்கு , விரைவிற்கு நேரமோ,நாழிகையோ,
மணித்துளியோ கணிக்கவே இயலாது.
கண்ணிமை அசைவிலே நெட்டை நெக்குறச் செய்திடும், எதிர் அணியினரை திக்குமுக்காடச்செய்யும்.
அவர்தம் கனத்தயடியூடாக(Heavyshot)செலுத்தும் ப்தினை தடுத்து எடுத்திடயியலாது.பந்தை பணிப்பதிலும்(Serve) ஒரு தனிநளினமயம் எதிரணிக்கோ ஏமாற்றுமயம்.
பெங்களூர் 515 இ.எம்.இ. அடிப்படை பணிமனையில்(E.M.E.Basic Workshop)பணியாற்றியப்போது எம்.ஏ.அமலோற்பவம் பி.ஏ. அவர்களிடம் நெருங்கி பழகி நட்புடன் இருதார்கள். பழங்குடி கிருத்துவர்,பட்டதாரி, தங்கவயல்வாசி,உரிகம் தொழிற்சங்கத் தலைவர்,ஆங்கிலப் புலமைமிக்கவர்.கோலார் கல்லூரி மாணவர்கள் ஆண்டுவிழாவில் ஒரேமேடையில் அறிஞர் அண்ணாவும் அணுகுண்டு அமலோற்பவமும்
ஒன்றாக பேசினார்கள்.மிகமிக நன்றாக சொற்களை வீசினார்கள்.
துளசி மணம் வீசும் தமிழ் இலக்கியம் அலசப்பட்டது. பல்கிப்பெருகும் அறிவியல் ஆங்கிலமும் ஆய்வுக்கண்டது.அருதமிழிலே,
அழகுநடையிலே,அடுக்குத்தொடரிலே அறிஞர் அண்ணா சொல்மாரி பொழிந்தார்கள்.ஆங்கிலமொழிலே பாங்குரும்வகையிலே எதுகைமோனையிலே அணுகுண்டு அமலோற்பவம் இடிமுழக்கமிட்டார்கள்.மணிமணியாக அணிவகுத்து வந்த ஆங்கிலப்பேச்சினை கேட்ட அறிஞர் அண்ணாவே வியந்து பாராட்டினார்கள்.


அத்தகைய ஆங்கிலத்தின் மெத்த மேதையான திரு.அமலோற்பவம் அவர்களை அப்போதைய கன்னடியர் தலைவர்களாகவும் பிறகு கர்நாடக மாநில அமைச்சர்களாகவும் திகழ்ந்திட்ட மாண்புமிகு B.பசவலிங்கப்பா B.A.B.L மாண்புமிகு N.இராச்சையா ஆகியோர்களிடம் நமது தலைவர் கே.பெருமாள் அறிமுகப்படுத்தியதின் பயனாக திருமிகு M.A.அமலோற்பவம் BA அவர்கள் எத்தியோப்பிய நாடு செல்ல ஏற்பாடாகியது.அந்நாட்டு மக்களுக்கு ஆங்கிலத்தை பய்ற்றுவிக்கவும் அப்பழுக்கின்றி தேர்ச்சிப்பெறவும், சொற்பெருக்காற்றவும் ஓர் இந்தியர் அம்லோற்பவம் கடல் கடந்த நாடாம் எத்தியோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டார் என்றால் அத்தகைதோர் ஏற்றத்திற்கு ஏற்பாட்டாளர்தான்
கேன்மைமிகு கே.பெருமாள். அதன்பிறகு திரு.அமலோற்பவம் கர்நாடக
மாநில சட்டப்பேரவை உருப்பினராகவும் மாநில உணவுத்துறை தலைவராகவும்(Food Corporation Chairman)தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதை
குறிப்பிட்டாகவேண்டும்
வருணாசிரத்தின் வைரியாக,நெறிக்கெட்ட வெறியர்களின் விலா எலும்பை பிளக்கும் இரும்பை கோடாலியாக,
தீண்டாமை கொடுமையை துண்டாடும் கூர்வாளாக, போர்பரணி பாடியவர்தான் கெழுமைக்குறிய கே.பெருமாள்.
அமெரிக்க நாட்டு கொலம்பியா பல்கலைக்கழகம், இங்கிலாந்து நாட்டின் கேம் பிரிட்ஜ் பல்கலைக்கழகம், மற்றும் ஜெர்மனியின் பொண் பல்கலைக்கழகம் ஆகிய முப்பெரும் வல்லரசு நாடுகளின் பல்கலைக்கழகங்களிலே கல்வி பயின்று சொல்லறியா பட்டங்கள் பெற்று, தன்னுரிமை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக அரும்பணியாற்றிய ஆற்றல்மிக்கோன் அறிவின் களஞ்சியம்,கல்விக்கடல்
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் என்னைவிட எந்நாடு பெரியது,என் நாட்டைவிட எனது சமுதாயம் பெரியது என்ற பொன்மொழியை,புதுமை புனலாக புரட்சிக்கனலாக ஆர்பரிக்கும் அலைக்கடலாக, மேடைதோறும்
முழங்குவதையே தனது பேச்சாகவும் உயிர் மூச்சாகவும் கொண்டு செயல்பட்டவர் கோடையிடி கே.பெருமாள்.
பெண்கள் நாட்டின் கண்கள்
தாய்குலத்தை நாயினும் கீழாக நடத்தப்பட்டதை கண்டு உள்ளம் வெதும்பி, மனம் பொறுமி, நெஞ்சம் துடித்து, இதயம் கொந்தளித்து, இதற்கோர் விடிவும் முடிவும் கண்டிட முனைந்தார் பர்.அம்பேத்கர்.
ஆசியாவின் ஒளிச்சுடர், பஞ்சசீல பாதுகாவலர், அமைதி புறா, பதினேழு
ஆண்டுகால முடிசூடா மன்னராக இந்திய தலைமை அமைச்சராக திகழ்ந்திட்ட மிக பெரிய சீர்த்திருத்தவாதி என பாரெல்லாம் புகழ்ந்திட்ட
பண்டிதர் ஜவஹர்லால் நேரு பெருமானிடம் இந்து அற சட்டவரைவு(Hindu Court Bill) பற்றி விளக்கமோடு விவாதித்தார்.பண்டிதர் நேரு அவர்களும் ஆதரித்து ஆமோதித்தார்.
பாராளுமன்றம்
இந்து சீர்த்திருத்த சட்டவரைவை பர்.அம்பேத்கர் பாராளும் மன்றத்தில் கொண்டுவந்தார்கள். ஐதீக அடிவருடிகளால், அஞ்ஞான பித்தர்களால்,பழமை பஞ்சாங்க எத்தர்களால்,வருணாசிரம் வெறியர்களால்
பார்புகழ்மேவும் சீர்மிகு செம்மலர் சட்டம் நேர்மையற்று தோற்கடிக்கப்பட்டது

நேர்மைக்கு நிராகரிப்பு , கருத்துக்கு கதவடைப்பு , பழம்போர்வைக்கு பொன்விழா,அறியாமைக்கு அரியாசனம்,சிந்தனைக்கு சிறைவாசம்,
சீரிளமை பெண்மைக்கு வனவாசம்
மாநாடுகள் கண்ட மாவீரன்

சொல்லுதல் யாருக்கும் எளிய அறியவாம்
சொல்லியவண்ணம் செயல்(இரையனார் குறள்)

பதவி என்றாலே அட்டைப்போல் ஒட்டிக்கொள்ளும் குட்டைச்செயலை வெட்டி வீழ்த்திய சட்டவித்தகர்.தாய்குல விடுதலைக்காக தான்வகித்த மைய அரசு அமைச்சர் பதவியை பர்.அம்பேத்கர் துறந்தார்கள்.
இந்தியாவின் இலட்சியவாதிகள்,புத்துலக சிற்பிகள்,மறுமலர்ச்சியாளர்கள்,
சமுதாய சிந்தனையாளர்கள்,சீர்த்திருத்தவாதிகள் அனைவரும் தலைவர் கே.பெருமாள் உட்பட வாழ்த்தி வணங்கி வரவேற்றார்கள்.
கர்நாடக மாநிலம் தங்கவயல் குடியரசுக் கட்சியின் வாயிலாக,
தியாகச்செம்மல் அம்பேத்கர் உணர்வுகளை ஆதரித்து நாவேதர் கே.பெருமாள் மேடைதோறும் இடிமுழக்கமிட்டதோடு சழுக்கர் செயலுக்கு சவுக்கடி கொடுத்திட, சவக்குழித் தோண்டிட பாரதம் முழுதும் பவனிவரும் பாபா சாகேபை அவனிப்போற்றும் அம்பேத்கரை, பகுத்தறி பகலவனை, பொன்வளர் ஞாலத்திற்கு தங்கத்தரணிக்கு அழைத்திடவும்,
அறங்கு அமைத்திடவும், அறியாமை அகன்றிடவும், மாமேதை முழங்கிடவும், இலட்சோபலட்சம் மக்களை திரட்டியும்,திக்கற்றவர்களை
திசை தெரிந்திடவும், தெளிவுப்பெற்றிடவும், சமுத்துவத்தை பெண்கள் கற்றிடவும்,ஆட்சிக்கோட்டையிலே குடிக்கொண்டோர் உணர்ந்திடவும்
உழைத்தார் உழைத்தார் கடுமையாக உழைத்தார் கே.பெருமாள்,உள்ளவுறுதியோடு,உண்மை உணர்வோடு, உணர்ச்சிப்பெருக்கோடு .
அண்ணல் அம்பேத்கர் அடிச்சுவட்டை பின்பற்றி அணிவகுத்தவர்கள் துணொவுமிக்க பணிப்புரிந்தவர்கள்,சமுதாயம் களங்கண்டவர்கள் பலர்
தலைவர் கே.பெருமாள் அவர்களிடம் நட்பு கொண்டவர்கள்.ஆம் பழங்குடி
மக்களின் பாதுகாவலர்களின் பெயற்பத்தியல் பாரீர்!புகழ்தனை கேளீர்!!.
சட்டப்பேராசிரியர் இரவ்பகதூர் என்.சிவராஜ் BA.BL .MP சென்னை நகர
தந்தையாக, குடியரசு கட்சியின் தலைவராக இருந்தவர்.தாதாசாகேப்
B.R.கெய்க்வாட் M.P. இங்கிலாந்து நாட்டில் வழக்குரைஞர் பட்டம் பெற்று,
அனைத்திந்திய செயலாளராகவும் அரசவை(ராஜ்ஜிய சபா) துணைதலைவராகவும் விளங்கிய பாரிஸ்ட்டர் கோபர்கடே M.P. ,கட்டிபாபு M.A.L.L.B., B.C.காம்ளே M.P.,N.M.காம்ளே, P.B.மேஷ்ராம் நாக்பூர் நகரசபை மேயர். பொருளாளர் கும்பாரெ,R.D.பண்டாரே M.P.,ஆந்திர ஆளுநர்
உரிமைக்குரல் பத்திரிகை ஆசிரியர் தமிழ்நாடு S.R.முனிசாமி M.L.A.
சீர்காழி K.B.S.மணி M.L.A. மற்றும் M.P.ஈஸ்வரிபாய் M.L.A.,ஆந்திர தளபதி
ராஜ்போஸ்,பூனா ஐ.சிவலிங்கம்,வாடப்பிள்ளை M.R.A, G.K.மானே M.P.
இலங்கை புத்தமார்க்க தலைவர் தெறாங்னனா,S.R.முனிசாமி M.L.A.


பொருளாதாரத்தால் முடக்கப்பட்டு,பொல்லா சாதியக்கொடுமையால் அடக்கப்பட்டு அரசியல் தகுதித்தன்மையிலும் ஒடுக்கப்பட்டு உரிமை இழந்த மனிதக்குலம் ஒன்று இருந்தது என்றால் அது ஆதி திராவிடர் இனம்தான்.
வாயிருந்தும் வார்த்தைகள் பேச வராது, தொட்டாலே தீட்டு என்பது மட்டும் அல்லாது பார்த்தாலே பாபம் என்ற பரிதாபத்திற்குறிய
ஒரு பரம்பரை இருந்ததென்றால் அது பழங்குடி பரம்பரைதான்.
அதனால்தான் பத்து ஆண்டு காலம் மூக் நாயக்(ஊமைகளின் தலைவன்) பத்திரிகை நடத்தினார்கள் நமது நவயுக நாயகன் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். பகிஷ்கர் பாரத் பத்து ஆண்டுகள் நடத்தினார். ஜனதா
தலைப்பில் பத்தாண்டுகள் நடத்தினார்.
06.12.1956 பாபா ஸாகிப் பஞ்சஸ்கந்த பிரிவினை அடைந்தார்கள்.
ஆதியர் வாழ்வில் இந்தியாவே இருண்ட கண்டமாகிவிட்டது. வறண்ட பூமியாக மாறியது.
இப்படி ஒரு இக்கட்டான, நெருக்கடியான நேரத்தில்தான் தலைவர் கே.பெருமாள் அவர்கள் இந்திய குடியரசு கட்சியின் மாநாட்டைஒ சாந்தமூர்த்தி பி.எம்.சுவாமிதுரை எர்மலை ஜுவாலை ஜே,சி.ஆதிமூலம் , எம்.தனகோபால் ,டாக்டர் ஏ.வி.எம்.சாமி, ஜெய்பீம் சிகாமணி ஆகியோரொத்துழைப்போடு பெரும்பணி ஆற்றினார்கள்.
தங்கச் சுரங்கத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடும்
பாட்டாளி தோழர்கட்குஇரத்த தானம் செய்ய ஏற்பாடு செய்தார்கள்.