Donnerstag, 25. Dezember 2008

நினைவு நாள்


எனை ஈன்ற எந்தை கே.பெருமாள்
அவர்களின் தந்தை ஆம்பூர் குப்புச்சாமி
இந்து மத குமுகாயக்கேட்டால் ஒடுக்கப்பட்ட
தமிழ் மக்களை விழிப்புர தொடக்கத்தில்
பைசா தமிழன் பின்பு தமிழன் ஏட்டின் மூலம்(1913)
௧௯௧௩ வரை பண்டிதர் க.அயோத்திதாசர் பாடாற்றினார்.
அவருக்கு பின் கோலார் தங்கவயலில் பண்டிதமணி
ஜி.அப்பாதுரையார் தொடர்ந்து நடத்தினார்.அந்த ஏட்டினை
என் தந்தைக்கு வாங்கி கொடுத்து படிக்கச் செய்து பிற்காலத்தில்
ஆதி திராவிடர் எழுச்சிக்கு பாடாற்ற வழிவகுத்த பாட்டனாரின்
46ம் நினைவு நாள் இன்று.

Freitag, 19. Dezember 2008

தங்கவயல் பாடல்

தங்கவயல் பாடல்
நாட்டுப்புறப் பாடல் மெட்டு
இயக்குநர் : கொ.உலோகநாதன்
வந்தனம் வந்தனம் வந்தனம்
வந்தனம் வந்தனம் தானங்க
வந்திருக்கும் நீங்க ளெல்லாம்
பாட்டக் கேளுங்க
எங்க ஊறு எங்க ஊறு
தங்கவயலுங்க - இந்த
தங்கவயல் உலோகநாதன்
பாட்டக் கேளுங்க
(வந்தனம்)
பொன்னு வெளஞ்சதெல்லாம்
தங்கவயல் நிலத்தில் தானுங்க
நாட்டுக்கு தங்கத்தைக் கொடுத்ததெல்லாம்
பாட்டாளிதாங்க உழைத்த பாட்டாளிதாங்க
தங்கச்சுரங்கம் ஆரம்பித்தவர்
ஜாண்டைலர் குழுமம்தானுங்க
அது 1880ல் தொடங்கப்பட்டதுங்க
உலகத்திலே புகழடைந்த தங்கவயலுங்க
அதில் 35,000 ஆயிரம் தொழிலாளர் பாடுபட்டாங்க
தங்கச் சுரங்கத்தில் உயிரைவிட்டு
மாண்டவர்கள் எத்தனைப்பேருங்க - முடிவில்
10,000 ஆயிரம் தொழிலாளர்
உயிரை விட்டாங்க
தங்கச்சுரங்கம் நடத்திவந்தது இன்றும்தானங்க
120 ஆண்டுகாலம் ஆகிவிட்டதுங்க
முடிவான 3,200 தொழிலாளர்தானங்க
முடிவில் 2001 லேதான் மூடிவிட்டாங்க
பாட்டாளி படும் அல்லல்கள்
பல கோடிதானங்க - அந்த
பாராளுமன்றம் மன்சுவைச்சா
எல்லாம் கூடுமுங்க.
( வந்தனம்)
இப்பாடலை இயற்றிப் பாடியவர் கவி ,இசைமுரசு
கொ.உலோகநாதன்
தங்கவயல்