Samstag, 25. Oktober 2008

- இதுவும் ஒரு கருப்பு சூலைதான்

கோலாரில் தமிழ் தியாகிகள் நினைவு எழுச்சிப் பேரணி -
கோலாரில் தமிழ் தியாகிகள் நினைவு எழுச்சிப் பேரணி - இதுவும் ஒரு கருப்பு சூலைதான்சரவண இராசேந்திரன்சூலை 26, 2008
கோலாரில் தங்கம் என்றதும் நம் நினைவிற்கு வருவது, தமிழர்கள் தாம், ஆம் இந்தியாவின் மிகபெரிய தங்கவயல் தங்கம் எடுக்க பல இன்னல்கள் பட்டு எடுத்தது தங்கமாக இருந்தாலும் அவர்களின் வாழ்வு தகரமாகவே இருக்கிறது. இதோ இன்று பல சுரங்கங்கள் அடைக்கபட்டு விட்டன. அங்கு வாழ்வாதரமாக குடியேறிய தமிழர்கள். இன்று கூலி வேலை செய்து பிழைக்கும் சூழல், இந்த தியாகிகளின் உண்மையில் பாராட்டுக்குறியவர்கள்.
கர்னாடக அரசாங்கம் இவர்கள் தமிழர் என்பதற்காகவே இவர்களுக்கான எந்த சலுகைகளிலும் முனைப்பு காண்பது இல்லை , அங்கு உள்ள ஒரே ஆ தி மூ க மேலவை உறுப்பினரோ தேர்தல் சமயத்தில் மட்டும் தான் வெளியில் தலைகாட்டுவார்.
தற்போது மாநகராட்சி உறுப்பினர்கள் கூட தாங்கள் இதை செய்தோம் இன்னதை செய்ய போகிறோம். என புத்தகமிட்டு வழங்கி வருகின்றனர். ஆனால் இவருக்கு என்ன செய்தார் என்று புத்தகமிட்டால் அது வெள்ளை பக்கங்களாகத்தான் வரும்.
மாநாட்டின் குரல் மாநில அரசாங்கத்திற்கும், மத்திய அரசாங்கத்தின் காதுவளை கிழிய ஒலிக்கட்டும்.ஆனாலும் இதிலும் சில அரசியல் பச்சோந்திகள் குளிர் காயாமல் பார்த்துகொள்வது மாநாட்டை நடத்தும் தமிழுணர்வாளர்களின் கடமை
"போடுர இடத்தில் போட்டால் பாறைகூட தவிடு பொடியாகிவிடும்"
கோலாரில் தமிழ் தியாகிகள் நினைவு எழுச்சிப் பேரணி - இதுவும் ஒரு கருப்பு சூலைதான்- பாரத் வெள்ளைச்சாமி -சூலை 26 , 2008
கோலாரில் தமிழ் தியாகிகள் நினைவு எழுச்சிப் பேரணி பெங்களூர்: தாய் தமிழுக்காகவும் தமிழர் உரிமைக்காகவும் போராடி உயிர் நீத்த தமிழர்களின் நினைவாக, கோலார் தங்க வயலில் ஞாயிற்றுக் கிழமை எழுச்சி மாநாடு நடைபெறுகிறது.இது தொடர்பாக கர்நாடக மாநில தமிழ் மக்கள் இயக்கத் தலைவர் சி.ராஜன், பொதுச் செயலாளர் ஆரோக்கிய நாதன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:கர்நாடகத்தில் மொழிக் கொள்கை, கன்னடர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வகை செய்யும் கோகாக் குழுவின் பரிந்துரைகளை அப்போது முதல்வராக இருந்த மறைந்த குண்டுராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி அரசு 1982-ம் ஆண்டு அமல்படுத்தியது.இதனால் மொழிச் சிறுபான்மையினருக்குத் தாய்மொழி கல்வி உரிமையைப் பறிக்க அப்போதைய அரசு முயன்றது. இதை எதிர்த்து தமிழில் கல்வி கற்க உரிமை கோரி கர்நாடகத்தில் சிறுபான்மைத் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.தமிழர்கள் அதிகம் வசிக்கும் கோலார் தங்க வயலில் இந்தப் போராட்டம் மிகவும் தீவிரமாக நடந்தது. அறவழியில் நடந்த இந்தப் போராட்டத்தை காவல்துறை அத்து மீறி அடக்க முயன்றது. போராட்டம் நடத்திய தமிழர்கள் ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்டனர்.காவல் துறையின் இந்த அட்டூழியத்தைப் பொறுத்துக் கொண்டு உரிமைக்காக தமிழர்கள் தொடர்ந்து போராடினர். இதனால் குண்டுராவ் அரசு தமிழர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி போராட்டத்தை அடக்க உத்தரவிட்டது.இதைத்தொடர்ந்து தங்கவயலில் போராட்டம் நடத்திய தமிழர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் பால்ராஜ், உதயகுமார், மோகன், பரமேஸ்வரன் ஆகியோர் குண்டுபாய்ந்து இறந்தனர். பலர் காயம் அடைந்தனர்.போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட பலர் இன்று வரை வீடு திரும்பவில்லை. அவ்வாறு காணாமல் போனவர்கள் மட்டும் 15 பேர்.தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் நடந்து 26 ஆண்டுகள் ஆகிவிட்டன.தமிழுக்காக உயிர்நீத்த தியாகிகளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 27-ம் தேதி எழுச்சி நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு எழுச்சி நாள் பேரணி மற்றும் எழுச்சி மாநாடு ஞாயிற்றுக்கிழமை தங்க வயலில் நடைபெறுகிறது.பேரணி காலை 10 மணிக்கும், மாநாடு பகல் 12.30 மணிக்கும் நடைபெறுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நன்றிதட்ஸ்தமிழ் மின்னிதழ்
கோலார் தங்கவயல் தமிழ் ஈக மறவர்களைக் குறித்து இத்தளத்தில்(yahoo groups) இணைத்தமைக்கு
மிக்க நன்றி.இந்தியாவில் எப்படி தமிழகம் ஒரு தீவாகவுள்ளதோ அதே போல் கருநாடக மாநிலத்தில்
கோலார் தங்கவயல் ஒரு தீவாகும்.
என் இளமைக் காலத்தில் தொடக்கப் பள்ளியில் தமிழ் பாடமொழியாக இருந்தது.ஆனால் இன்று யாம்
பயின்ற் அந்த பள்ளிக்கூடம் தரைமட்டமாக்கப்பட்டுவிட்டது.ஏனைய
பள்ளிக்கூடங்களில் தமிழ் பாடமொழியாக இல்லை.எல்லாம் கன்னடமையமாகிவிட்டது.
தமிழ் பெயரைச் சூட்டிக்கொள்ளக்கூட அச்சப்படுகிறார்கள்.கோகாக் எனும் கன்னட பிராமணரைத்
தலைவராகக் கொண்ட ஆய்வுக் குழு தமிழ்க் கல்விக்கு கேட்டை உண்டாக்கிவிட்டது. அதனை
எதிர்த்து தமிழ்மொழிக் காக்கும் போராட்டத்தில் கி.பி.1982 சூலை திங்கள் 5,6,7ம் பக்கலில் கருநாடகக்
காவல் துறையால் நான்கு தமிழ் மறவர்கள் சுட்டுக் கொள்ளப்பட்டனர்.தங்கவயலில் அண்ணல்
அம்பேட்கரின் அகில இந்தியக் குடியரசு கட்சியை பெருபாண்மைக் கொண்ட இடமாகும்.சட்டமன்ற
உறுப்பினர் அக்கட்சியைச் சேர்ந்தராக இருப்பார். இந்த நான்கு தமிழ் மறவர்களின் ஈகத்தைக்
கேள்விப் பட்டு சந்தர்ப்பவாத தன்னலப் பேர்வழியான நடிகர் மா.கோ.இரா.(MGR) மகர்றையாக
தங்கவயல் வந்து இறந்தவர் குடும்பத்திற்க்கு உரூ.40,000 வழங்கினார்.அதனைக் கண்ட
தங்கவயல் மக்கள் முதன்முறயாக அ.தி.மு.க. உருவாகி தேர்தலில் வெற்றியும் பெற்றுவுட்டது.ஆனால்
ஈழத் தமிழர்களைவிட கருநாடக அரசினால் தங்கவயல் தமிழர்கள் புறக்கனிப்பிற்கு ஆளானார்கள்,அதன் தொடர்ச்சியாக தங்கச்சுரங்கங்கள் அனைத்தும் (போதுமான தங்கம் இருந்தும்)மூடப்பட்டுவிட்டன.தங்கவயல் தங்கச்சுரங்க்கள் மூடப்படும் என்று 60 களில் குடியரசுக் கட்சியைச் சார்ந்த என் தந்தையார் கே.பெருமாள்
தலைமையில் தண்டவாளாத்தில் தலை வைத்து போராட்டம் நடத்தி தமிழர்களின் எதிர்காலம் சிறக்க பஞ்சாப் மாநிலத்திற்கு போகயிருந்த மண்வாரி இயந்திரத தொழிற்சாலை தங்கவயலில்அமைய காரணமானார்கள்.
ஆனால் தங்கவயல் தமிழர்களுக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்காமல் செய்துவிட்டது கன்னட அரசு. . இத்தமிழர்களுக்கு தமிழகமாகட்டும் அல்லது நடுவன் அரசாகட்டும் எவரும் பல அறவழி போராட்டங்கள் நடத்தியும் தங்கவயல் தமிழர்களை எவரும் கண்டுக்கொள்வதில்லை. தமிழர்களை அந்த ஊரைவிட்டே விரட்டுவதுதான் கருநாடக அரசின் திட்டம்.அல்லலுக்கும் அவதிக்கும் உள்ளாகியுள்ள தங்கவயல் தமிழர்கள் குறித்து தொடர்ச்சியாக
thamizhankural. org எனும் இணையதளத்தில் என் இடுகையைக் காணலாம்
தங்கவயல் தமிழன்
ஆ.பெ.மணியரசன்செருமனி

Donnerstag, 9. Oktober 2008

தங்கவயல் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டுச் சிறப்பு வெளியீடு

வாழ்வுரிமை
குணா
ஓர் இனமோ மக்கள் பிரிவோ அமைதியாக வாழ்ந்து தனித்து வளம்பெற இயலாத வகையில் , ஒடுக்கப்படவும் அடக்கப்படவும் நேர்கின்ற சூழலில் தான் வாழ்வுரிமை
என்ற பேச்சே எழுகிறது. மொத்தமாகவோ சில்லரையாகவோ அவர்களின் வாழ்வியல் உரிமைகள் பறிக்கப்படவோ மறுக்கப்படவோ நேர்கின்ற போதுதான் , " எங்களுக்கு
இந்த மண்ணில் வாழ உரிமை உண்டு " என்னும் உள்ளக்குமுறல் ஒடுக்குண்ட மக்களிடமிருந்து எழுகிறது. எனவே , மாந்தவுரிமை அல்லது பொதுவியல்(civil) உரிமை என்றெல்லாம் சொல்லப்படும் மக்களுரிமைக்கான மறுப்பெயர்தான் வாழ்வுரிமை . மாந்தவுரிமையோ பொதுவியல் உரிமையோ பொதுவாகத் தனியாள் மட்டத்திற்கான உரிமையைக் குறிக்கும் . ஆனால் , வ்வாழ்வுரிமை என்ப்து ஓர் இனத்தின் அல்லது மக்கள் பிரிவின் ஒட்டுமொத்த உரிமையைப் பற்றியது . ஆகவே , வாழ்வுரிமை மறுப்பு என்பது மிகவும் கொடுமையானது ; ஒட்டுமொத்ததில் சந்தடியில்லாத இனவொழிப்புக்கு ( genocide ) ஈடானது .
இந்தப் பின்னனில்தான் கருநாடகத் தமிழரின் வாழ்வுரிமை மாநாடு நடைப் பெறுகிறது .

மண்ணைப் பறித்தானே !
கன்னடச் சளுவளி இயக்கம் முப்பதாண்டுகளுக்கு முன்னர் எழுந்த்போது , தமிழர்களின் வாழ்வுரிமையைப் பறிப்பதையே – தமிழர்களை மட்டுமே தன் தாக்குதல் குறியாகக் கொள்வதையே - அது தன் னுடைய நோக்கமாகக் கொண்டிருந்தது . பெங்களூர் . கோலார் , மைசூர் ஆகிய மாவட்டங்கள் முழுவதும் , துமுக்கூர் , மாண்டியம் ஆகிய மாவட்டங்களின் பகுதிகளும் திகிழர் எனக் கன்னடரால் அழைக்கப்பட்ட பழந்தமிழர்கள் வழ்வ்ழியாக வாழ்ந்துவந்த மண்ணாகும் . இத்திகிழர்கள் போக, ஆங்கிலேயர் ஆட்சியில் பெங்களூரின் தண்டுப்பகுத்யிலும் கோலார் தங்கவயலிலும் குடியேறிய தமிழர்கள், இங்கு ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர் . கொங்குநாட்டிலிருந்து பழைய மைசூர்ப் பகுதியைப் பிரித்த வடுகப் படையெடுப்பாளர்கள் , அதைத் தனிநாடாக ஆக்கினர் . அதை அவர்கள் கங்கநாடு என்றனர் . இந்தக் கங்கநாட்டில் , தமிழர்களும் தமிழ்ப் பண்பாடுமே மேலோங்கி இருந்ததை வரலாறு காட்டும் .

இந் நிலையில், மொழிவழி மாநிலங்கள் 1956 ஆம் ஆண்டில் அமைந்த பிறகு தோன்றிய அகன்ற கருநாடகத்தின் தலைநகராகப் பெங்களூர் ஆனது. இந்தப் பெங்களூரோ. தமிழர்கள் வழிவழியாக வாழ்ந்துவந்த மண்ணாக இருந்தது. இதனால் , இப் பகுதியை அரக்கப் பறக்கக் கன்னடமயமாக்குவது என்னும் போக்கும் நோக்கும் அரசியல் வடிவம் பெற்றது.அதன் விளைவே கன்னடச் சளுவளி இயக்கமாகும்.
மண்ணை இழந்தவுடன் ஓர் இனத்து மக்களிடமிருந்து முதலில் பறிக்க்ப்படுவது அவர்கள் தங்களின் தாய்மொழியைக் கற்கும் உரிமையே ஆகும் . அரசு அலுவலகங்களிலும் தொழிலகங்களிலும் அவர்களுக்குள்ள வேலைவாய்ப்புகளைக் குறைப்பது அடுத்த வேலை . பெங்களூரிலும் இதுவே நடந்த்து . ஆனால், இங்கு நடந்தவற்றிற்கு ஒரு தனிப்போக்கு உண்டு. பெங்களூர் நகரத்தின் சுற்றுமுற்றும் இருந்த நிலபுலங்கள் யாவும் திகழர்களிடம் இருந்தன. இத் தலைநகரம் மளளவென வளர்கையில். புதுப்புதுப் பகுதிகளை உருவாக்க வேண்டுமாயின், இத் திகிழரிடமிருந்த நிலங்களைப் பறித்தாக வேண்டும். பெங்களூர் மேம்பாட்டு வாரியத்தை(Bangalore Devolopment Authority) அமைப்பது என்னும் சாக்கில் பழந்தமிழரான அத்திகிழர்களின் நிலங்களெல்லாம் கருநாடக அரசால் உரிய இழப்பீடு இன்றிக் கையக்ப்படுத்தப்பட்டது.
இப்பகுதியில் வந்தேறிய தெலுங்கு இரெட்டிகள், திகிழர்களின் கல்லாமையையும் பேதமையையும் கண்டு அவர்களை ஏமாற்றிச் சுற்றும்முற்றுள்ள நிலங்களை எல்லாம் இன்னொரு பக்கம் மெல்லக் கையகப்படுத்தி வந்தனர். எழுபதுகளில் பூதமென எழுந்த கன்னடச் சளுவளி இயக்கம், இந்த இரெட்டிகளுக்குத் தோள்கொடுத்தது.
இந்த்க் கன்னடச் சளுவளி இயக்கத்தின் மூளை, தெலுங்குப் பார்ப்பனர்கள். அதற்குப் பணத்தால் ஊட்டம் தந்தது தெலுங்கரான கோமூட்டிச் செட்டிகள். அதன் அடிதடி அதிரடிப்படையாகத் தெலுங்கு இரெட்டிகள் இருந்தனர். இவ்வாறு தமிழர்களை ஓரங்கட்டவும் – தமிழர் இனத்தை ஒழித்துக்கட்டவும் – மூளையாகவும் முட்டியாகவும் இருந்தவர்கள் தெலுங்கரே ஆவர். ஆனால், இன்று இனவெறி கன்னடர் எல்லாரிடமும் புரையோடிய ஓர் மனநோயாகிவிட்டது.
-வளரும் -