Freitag, 27. November 2009

மாவீரர் நாள்



இன்று எம்மினம் தன்மானத்துடன் வாழ

தந்நில மீட்புக்காகப் போராடி வீரச்சாவினைத்

தழுவி, எம் கடமைதனை உண்ரத்த ஊக்கியாக

விளங்கிடும் மாவீரர் நாள்.தொலைநோக்குடன்

பகுத்தறிவுடன் இல்க்கினை எய்திட நமக்கு

விதையாகிப் போனவர் துளிர்விட்டு,இனியும்

யாம் ஏமாறாது இருக்க ஊக்கமளித்திடும் நாள்.

எம்மின் இலக்காகிய தனித்தமிழ் ஈழ வேட்கை

தணியும்வரைப்போராடுவோம் ஒன்றினைந்து .


ஆம்பூர் பெ.மணியரசன்

Donnerstag, 5. November 2009

எம் அன்னையின் அரவணைப்பு இழந்திட்ட நாள்

அம்மா உம்மை , எம்மிடமிருந்து இவ்வளவு விரைந்து

இயற்கை அன்னை நிலையான ஓய்வினை

உமக்கு வழங்கி தன்னிடம் சேர்த்துக்கொண்டாள்.

இறுதி நாள்வரை எமக்காக எம் நலத்தின் பால்

உழைத்திட்ட உங்கள் அன்பு உள்ளத்தினைப்

பொறுக்காது இயற்கையோ உங்கள் அன்புள்ளம்

தமக்கே கிடைக்கவண்ணமே அழைத்துக்கொண்டாள்

ஓய்வின்றி எமக்காக முப்பொழுதும் உழைத்திட்ட அன்பு

தாயே!நீங்கள் நன்றாக ஓய்வடுங்கள்.எம் கடமைதனை

தவறாது நினவேற்றிவிட்டு எமக்கு அளித்திட்ட அன்புதனை

எமக்கு பின்வருவோரிடம் கையளித்துவிட்டு வருவோம்,

உம் அன்பொளி தொடர்ந்நு இப்பூவுலகில் சுடர்விட்டு ஒளிர.

Donnerstag, 1. Oktober 2009

கோலார்தங்கவயலில் தந்தை என்.சிவராஜ்


தங்கவயலில் தந்தை என்.சிவராஜ் அவர்களுடன் என் தந்தை கே.பெருமாள்
அவர்கள்.இடது புறத்திலிருந்து மூன்றாம் நபர் கே.பி.பாலன் நான்காவதாக உள்ளவர் தங்கவயல் மைசூர் மாநில குடியரசு கட்சி பொது செயலாளர் என் தந்தை கே.பெருமாள் ஐந்தாவதாக உள்ளவர் வள்ளியம்மை ,ஆறாவதாக உள்ளவர் தந்தை என்.சிவராஜ்,ஏழாவதாக உள்ளவர் குடியரசு.

Mittwoch, 30. September 2009

களத்தில் நின்ற காவலர்கள்

ஆரியர் தம் சூழ்ச்சியினால் இயற்கையாகவே இளகிய மனம்
படைத்த மக்கள் மனதில் மதத்தின் பெயரால் இட்டுக்கட்டிய
புராண புளுகுமூட்டைகள் மூலம் சாதி பாகுபாடுகளை புகுத்தி அறிவை முடமாக்கியதுமல்லாது ஏற்ற தாழ்வுகளை
ஏற்படுத்தி தங்களுக்குள் வெறுத்துக்கொள்ளும் பிரித்தாளும் போக்கினை ஏற்படுத்திஅதில் குளிர் காய்கின்றனர். இதனை முதலில் இந்த சாதி, தீண்டாமைதனை எதிர்த்து குரல்
கொடுத்தவர் புத்தரே!புத்தரை வழியை பின் பற்றியோர் அனைவரும் ஆரிய பார்ப்பனர்களால் ஒடுக்கப்பட்டவர்களே! அவருக்கு பின் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் களத்தில் ஆதிதிராவிடருக்காக பார்ப்பனரின் அட்டூழியங்களை பைசா தமிழன்,தமிழன் ஏடுகள் மூலம் அம்பலபடுத்திவர்
க.அயோத்தியதாசர் பண்டிதர்.அவரின் உறவினரான தாத்தா இரட்டைமலை
சீனிவாசன் இலண்டனில் நடந்த மூன்று வட்டமேசை மாநாடுகளில் அண்ணல் அம்பேட்கருடன் கலந்து கொண்டவராவார்.இவரின் தொண்டும்
வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டிய பணிகள்.இவர்களின் அடியையொற்றி அண்ணல் அம்பேட்கருடன் இணைந்து
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உழைத்தவர் சட்டமன்ற உறுப்பினர்.,பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னால் நகராண்மை தலைவராக,இந்திய குடிரசு கட்சியின் தலைவராக விளங்கியவர் தந்தை என்.சிவராஜ் ஆவார்கள்.அவரின் 118வது பிறந்த நினைவு நாள் இன்று. தந்தையின் தொண்டை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்வது இதுவே தக்க தருணமாகும்.

Dienstag, 29. September 2009

Donnerstag, 21. Mai 2009

கருப்பு நாள்


இன்றுஎனை ஈன்ற தந்தையின் 26ம் ஆண்டு நினைவு நாள்
தங்கவயல் தமிழர் தலைநிமிர்ந்து வாழ தம்வாழ்நாள் முழுதும் அண்ணல்
அம்பேட்கர் வழிநின்று பாடாற்றியவர்
புத்தவழியினை பின்பற்றுவதாக கூறும் கொடியவிலங்கினால்
கொல்லப்பட்ட எண்ணிக்கியலடங்கா எம் தமிழ் ஈழ மக்களை நினைந்துருகும்
கரிய நாள்.காயமுற்றும் மனத்தளவில் சொல்லொன்னா துயரத்தில் ஆழ்ந்திருக்கும் எம் உடன் பிறப்புக்கள் ஆறுதல் பெறும் நாளை எதிரநோக்குகிறேன்

Freitag, 1. Mai 2009

உழைப்பாளர் நாள்

புரட்சி பாவலரின் 118 ஆம் ஆண்டு பிறந்தநாள் கிழமையில்
உழைப்பாளர் நாளில் அவர் பாடினப் பாட்டினை
நினைவு கூறுவதில் பேருவுவகைக்கொள்கிறேன்.
நீங்களே சொல்லுங்கள் !
சித்திரச் சோலைகளே!உமை நன்கு
திருத்த இப் பாரினிலே-முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தன
ரோ! உங்கள் வேரினிலே.
நித்தம் திருத்திய நேர்மையி னால்மிகு
நெல்விளை நன்னிலமே! - உனக்
கெத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை
இறைத்தனர் காண்கிலமே.
தாமரை பூத்த தடாகங்களே! உமைத்
தந்தக் காலத்திலே - எங்கள்
தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்
சொல்லவோ ஞாலத்திலே.
மாமிகு பாதைகளே! உமை இப்பெரு
வையமெ லாம் வகுத்தார் - அவர்
ஆமை எனப் புலன் ஐந்தும் ஒடுங்கிட
அந்தியெல்லாம் உழைத்தார்.
ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே! - உங்கள்
ஆதி அந்தம் சொல்லவோ? - நீங்கள்
ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பில்
உதித்தது மெய் அல்லவோ?
கீர்த்திகொள் போகப் பொருட்புவியே! உன்றன்
கீழிருக்கும் கடைக்கால் - எங்கள்
சீர்த்தொழி லாளர் உழைத்த உடம்பிற்
சிதைந்த நரம்புகள் தோல்!
நீர்கனல் நல்ல நிலம் வெளி காற்றென
நின்ற இயற்கைகளே! - உம்மைச்
சாரும் புவிப்பொருள் தந்ததெவை? தொழி
லாளர் தடக்கைகளே!
தாரணியே! தொழிலாளர் உழைப்புக்குச்
சாட்சியும் நீயன்றோ? - பசி
தீரும் என்றால் உயிர்போகும் எனச்செல்லும்
செல்வர்கள் நீதி நன்றோ?
எலிகள் புசிக்க எலாம் கொடுத்தே சிங்க
ஏறுகள் ஏங்கிடுமோ? - இனிப்
புலிகள் நரிக்குப் புசிப்பளித்தே பெரும்
புதரினில் தூங்கிடுமோ?
கிலியை விடுத்துக் கிளர்ந்தெழுவார் இனிக்
கெஞ்சும் உத்தேசமில்லை - சொந்த
வலியுடையார் இன்ப வாழ்வுடையார் இந்த
வார்த்தைக்கு மோசமில்லை.